நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: மாணவர்களின் கைரேகையை பதிவு செய்ய முடிவு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், உதித் சூர்யாவை அடுத்து பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் நடப்பு ஆண்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இன்னும் எத்தனை பேர் இந்த விவகாரத்தில் சோதனைக்கு பின் சிக்குவார்கள் என்பது தெரியவில்லை இந்தநிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளையும் பெறுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையிடம் உள்ள மாணவர்களின் கைரேகையுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து, முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய
 

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: மாணவர்களின் கைரேகையை பதிவு செய்ய முடிவு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், உதித் சூர்யாவை அடுத்து பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் நடப்பு ஆண்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இன்னும் எத்தனை பேர் இந்த விவகாரத்தில் சோதனைக்கு பின் சிக்குவார்கள் என்பது தெரியவில்லை

இந்தநிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளையும் பெறுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையிடம் உள்ள மாணவர்களின் கைரேகையுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து, முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள 11 தனியார் கல்லூரிகளில், 7 கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைதுள்ளன.

அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கைரேகையை சோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற முறை கொண்டு வரப்படவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது

From around the web