நேரடியாக பிளஸ் 2 தேர்வு: தமிழக அரசின் கல்வித்துறை ஒப்புதல்

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதாமல், நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது சிபிஎஸ்இ பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 1 தேர்வை பள்ளிகளே நடத்திக் கொள்ளும். எனவே ஒருசில காரணங்களால்
 

நேரடியாக பிளஸ் 2 தேர்வு: தமிழக அரசின் கல்வித்துறை ஒப்புதல்

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதாமல், நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது

சிபிஎஸ்இ பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கிடையாது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 1 தேர்வை பள்ளிகளே நடத்திக் கொள்ளும். எனவே ஒருசில காரணங்களால் சிபிஎஸ்இ மாணவர்கள் தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 சேர்ந்தால், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்கள் சிபிஎஸ்இ பள்ளியில் எழுதிய பிளஸ் 1 தேர்வே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது

இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவானதை அடுத்து இந்த பிரச்சனையில் சிக்கிய மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

From around the web