தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: விடுமுறை அறிவிப்பு வருமா?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வருகிற 20-ஆம் தேதி அன்று மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 20-ஆம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில்
 
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: விடுமுறை அறிவிப்பு வருமா?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வருகிற 20-ஆம் தேதி அன்று மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 20-ஆம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன், தொண்டியில் 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது., சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை அறிக்கையின்படி நாளை கனமழை பெய்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web