காலை 8 மணிக்குள் கொரோனாவால் 18 பேர் பலியா? சென்னையில் பரபரப்பு

சென்னையில் இன்று காலை 8 மணிக்குள் 18 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 2,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், தமிழகத்தில் நேற்று மட்டும் 62 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில்
 

காலை 8 மணிக்குள் கொரோனாவால் 18 பேர் பலியா? சென்னையில் பரபரப்பு

சென்னையில் இன்று காலை 8 மணிக்குள் 18 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 2,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், தமிழகத்தில் நேற்று மட்டும் 62 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் மட்டும் 18 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை- 4 பேர்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 3 பேர்களும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 9 பேர்களும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் தலா ஒருவரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதனால் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

From around the web