திமுகவுக்கு 177, அதிமுகவுக்கு 49, கமல் 3: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு!

 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் 5 முனை போட்டி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி மற்றும் சீமான் கட்சி ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய ஐந்து முதல்வர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐந்து கூட்டணிகள் போட்டியிட்டாலும் உண்மையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் மட்டுமே நேரடி போட்டி ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

dmk admk

இந்த நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்து கணிப்பில் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் திமுக 177 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 49 தொகுதிகளும் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு மூன்று தொகுதிகளும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணிக்கு மூன்று தொகுதிகளும் மற்றவர்களுக்கு இரண்டு தொகுதிகளும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 

இதனை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி செய்த நிலையில் அடுத்ததாக திமுக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி தேர்தல் முடிவுகளும் வருமா? அல்லது மாற்றம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web