180 கேள்விகளில் 173 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில்: நீட் குறித்த உண்மைகள்

 

நீட் தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் அதனால் அவர்களால் சரிவர மதிப்பெண்களை எடுக்க முடிவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது 

இதுகுறித்து நேற்று திமுக எம்பி டிஆர் பாலு அவர்கள் பாராளுமன்றத்தில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட்தேர்வு கேள்விகள் குறித்த ஆய்வுகளில் மொத்தம் உள்ள 180 கேள்விகளில் 173 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்கப்பட்டு உள்ளது என்பது தெரியவந்துள்ளது 

ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்ற வகையில் கிட்டத்தட்ட 700 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்கப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தை நன்றாக புரிந்து படிக்கும் மாணவர்கள் அதிகபட்சமாக 700 மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புள்ளது என்பது தான் உண்மையான நிலை என்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் அனைத்து கேள்வியும் கேட்கப்படுகிறது என்று அரசியல்வாதிகள் கூறும் கூற்றில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்றும் இது குறித்து ஆய்வு செய்த ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது 

எனவே நீட் தேர்வு குறித்த அச்சத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துவதை தவிர்த்து விட்டு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசியல்வாதிகள் ஈடுபட வேண்டும் என்றும் அல்லது அமைதியாக இருந்தாலே போதும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்


 

From around the web