ரேசனில் 14 வகை பொருட்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி

 
ration store

முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாளில் ரேஷனில் ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதன்படி இன்று இரண்டாவது தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகை ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் தொடங்கி வைத்தார்.

இந்த 14 வகை பொருட்கள் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் கிட்டத்தட்ட 2 கோடியே 11 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு, துணிப்பை மற்றும் தேயிலை தூள் ஆகிய 14 பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் ஊழியர்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகை மற்றும் 15 வகையில் பொருட்கள் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web