112 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்: டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிர்வாக வசதிக்காகவும் அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்தும் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது உண்டு
ஆனால் அதே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் மிக அரிதாகவே காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடைமுறை அமலுக்கு இருக்கும் நிலையில் திடீரென 112 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் 112 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து சற்று முன்னர் டிஜிபி திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன