ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அவகாசம் கோரினார் சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது அரசுக்கு எதிராக ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் செயல்பட்டதாகக் கூறி தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சார்பில் சபாநாயகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகார் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.
 

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது அரசுக்கு எதிராக ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் செயல்பட்டதாகக் கூறி தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சார்பில் சபாநாயகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகார் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபாநாயகர் முடிவில் தங்களால் தலையிட முடியாது என்றும் சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தது. ஆனால் அதே நேரத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மூன்று வருடம் காலதாமதம் செய்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதிலளிக்க சபாநாயகர் அவகாசம் கோரியுள்ளார். சபாநாயகர் அவகாசம் கேட்டதை அடுத்து மேலும் 4 வாரங்கள் அவருக்கு அவகாசம் கொடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஒத்து வைத்துள்ளது.

From around the web