10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

 
students

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் குறித்து அறிவிப்பு ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் டவுன்லோட் செய்வதற்கு மாணவர்கள் தங்களுடைய பிறந்த தேதி மற்றும் பதிவு எண்களை பதிவு செய்து அது போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 23-ஆம் தேதி பதிவிறக்கம் செய்யும் பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து பதினோராம் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web