எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வினாத்தாள் தொகுப்பு: சென்னையில் எங்கெங்கு கிடைக்கும்?

பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒவ்வொரு ஆண்டும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத வசதியாக வினாத்தாள் தொகுப்பு வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இந்த தொகுப்பு வரும் 27ஆம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே தொகுதியாக ரூ.60 விலையிலும், 12ஆம் மாணவர்களுக்கு கணித பாடவரிசைக்கு வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் தீர்வு
 
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வினாத்தாள் தொகுப்பு: சென்னையில் எங்கெங்கு கிடைக்கும்?

பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒவ்வொரு ஆண்டும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத வசதியாக வினாத்தாள் தொகுப்பு வெளியிடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு இந்த தொகுப்பு வரும் 27ஆம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே தொகுதியாக ரூ.60 விலையிலும், 12ஆம் மாணவர்களுக்கு கணித பாடவரிசைக்கு வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் தீர்வு புத்தகம் இணைந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிக்கு தனித்தனியாக ரூ.80 விலையிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த வினாத்தாள் தொகுப்பு தமிழகம் முழுவதும் 35 இடங்களில் கிடைக்கும் என்றும் சென்னையில் அரசு மேல்நிலைப்பள்ளி அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. சென்னை எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி சேத்துப்பட்டு, ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி சைதாப்பேட்டை ஆகிய .3 இடங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினாதொகுப்புகளை மாணவர்கள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

From around the web