10.5% இடைக்காலத்திற்கு தான்: துணை முதல்வரின் கருத்துக்கு ராமதாஸ் பதிலடி!

 

தமிழக சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதும் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு எதிர்ப்பு தெரிவித்து பல சமூகத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று அளித்த பேட்டியின் போது திடீரென ஒரு கருத்தை தெரிவித்தார். அவர் பிற்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்பது இடைக்கால ஏற்பாடு தான் என்றும் இது இறுதியானது அல்ல என்றும் தெரிவித்தார். இதனால் பாமகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர் 

ops eps

இந்த நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியபோது வன்னியர்களுக்கு 10.5% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது என்று சமூக நீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர். இட ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என்று என்னிடம் தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் என்று கூறியுள்ளார். 

From around the web