இன்று நடைபெறும் 10,11,12ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தேர்வின் ஒருசில வினாத்தாள்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெறும் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கேள்வி தாள் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது அதுமட்டுமின்றி 11 மற்றும் 12ம் வகுப்புகளில் உயிரியல் வினாத்தாள்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற தேர்வு வினாத்தாள்கள்
 
இன்று நடைபெறும் 10,11,12ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தேர்வின் ஒருசில வினாத்தாள்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெறும் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கேள்வி தாள் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி 11 மற்றும் 12ம் வகுப்புகளில் உயிரியல் வினாத்தாள்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று 3 தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியே இருப்பதாக கூறப்படுவது மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது

From around the web