100 ஆண்டுகளுக்கு முந்தைய திருவள்ளுவர் சிலையில் ருத்ராட்ச மாலை!

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவியுடை அணிவித்து இருந்ததை திராவிட கட்சிகள் மிகப்பெரிய பிரச்சனையாக்கிவிட்டன. திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்ட நிலையில் திராவிட கட்சிகள் திருவள்ளுவர் நாத்திகர் என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கியது. அதுமட்டுமின்றி திருவள்ளுவருக்கு கருப்பு உடை அணிந்த புகைப்படங்களையும் வெளியிட்டது இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டன. திருவள்ளுவருக்கு
 
100 ஆண்டுகளுக்கு முந்தைய திருவள்ளுவர் சிலையில் ருத்ராட்ச மாலை!

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவியுடை அணிவித்து இருந்ததை திராவிட கட்சிகள் மிகப்பெரிய பிரச்சனையாக்கிவிட்டன. திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்ட நிலையில் திராவிட கட்சிகள் திருவள்ளுவர் நாத்திகர் என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கியது. அதுமட்டுமின்றி திருவள்ளுவருக்கு கருப்பு உடை அணிந்த புகைப்படங்களையும் வெளியிட்டது

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டன. திருவள்ளுவருக்கு உத்திராட்ச மாலையும் அணிவிக்கப்பட்டது. இதனை மதவெறி என்றும் திராவிட கட்சிகள் விமர்சனம் செய்தனர்

இந்தநிலையில் இலங்கையில் கடந்த 100 ஆண்டுகளாக இருந்து வரும் திருவள்ளுவர் சிலையில் ருத்திராட்ச மாலை இருப்பதை ஒருவர் புகைப்படத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவருக்கு ருத்ராட்ச மாலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ருத்திராட்ச மாலை அணிவிப்பதில் என்ன தவறு என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் திருவள்ளுவர் நாத்திகரா? ஆத்திகரா? இந்துவா? வேறு மதமா? அவருக்கு காவி உடையா? கருப்பு உடையா? என்ற ஆராய்ச்சிகளை புறந்தள்ளிவிட்டு அவர் எழுதிய திருக்குறளில் கவனம் செலுத்தினால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

From around the web