100% அனுமதி, இளைஞர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்: காங்கிரஸ் எச்சரிக்கை

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி இளைஞர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கடந்த சில வாரங்களாக திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய்யும் முதல்வரை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்தார்
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என தமிழக அரசிடம் இருந்து அரசாணை ஒன்று வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது இந்த அரசாணைக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன
ஏற்கனவே பாமக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி இதுகுறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அளித்த அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், உருமாறிய கொரோனா பரவிவரும் நிலையில் மக்களை பற்றி சிந்திக்காமல் அதிகம் அதிமுக அரசு எப்படி இவ்வாறு அனுமதித்தது? என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் இளைஞர்களின் உயிரோடு விளையாடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்