100 கோடி ஒதுக்கீடு: கொரோனா 3வது அலைக்காக தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 
third wave

கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை எதிர்கொள்ள ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில் கொரோனா முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது. மேலும் விரைவில் மூன்றாவது அலை தமிழகத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூபாய் 100 கோடி ஒதுக்கியுள்ளது

இந்த நிதியின் மூலம் தமிழக மருத்துவத் துறைக்கு தேவையான உபகரணங்கள், ஆக்சிஜன் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த நிதியை செலவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

From around the web