தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி: ஓய்வுபெற்ற நீதிபதி ஆவேசம்

கடந்த சில மாதங்களாக காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சில செயல்பாடுகளால் அங்குள்ள விளைநிலங்கள் பாதிப்பு அடைந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் நடத்தி வரும் போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால், அந்த பகுதி மக்கள் மிகுந்த துயரத்தை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து கூற சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த
 

கடந்த சில மாதங்களாக காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சில செயல்பாடுகளால் அங்குள்ள விளைநிலங்கள் பாதிப்பு அடைந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் நடத்தி வரும் போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால், அந்த பகுதி மக்கள் மிகுந்த துயரத்தை அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து கூற சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரிபரந்தாமன், கூறியதாவது: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 71 பெட்ரோலியக் கிணறுகளில் ஒன்றுக்குக் கூடச் சுற்றுச்சூழல் உரிமம் இல்லை. எனவே ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், சூழலியல் ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

From around the web