ரஜினி ஆதரவை திடீரென வாபஸ் பெற்றாரா தமிழருவி மணியன்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ரஜினிக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு அரசியல் ஆலோசனை கூறி வருபவர்களில் ஒருவர் தமிழருவி மணியன் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் இவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என்றும் ஆட்சியைப் பிடித்தால் இவருக்கு முக்கிய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் செய்திகள் உலவி வருகின்றன இந்த நிலையில் திடீரென
 
ரஜினி ஆதரவை திடீரென வாபஸ் பெற்றாரா தமிழருவி மணியன்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ரஜினிக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு அரசியல் ஆலோசனை கூறி வருபவர்களில் ஒருவர் தமிழருவி மணியன்

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் இவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என்றும் ஆட்சியைப் பிடித்தால் இவருக்கு முக்கிய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் செய்திகள் உலவி வருகின்றன

இந்த நிலையில் திடீரென ரஜினி ஆதரவு நிலையை தமிழருவி மணியன் வாபஸ் பெற்று விட்டதாகவும் வரும் தேர்தலில் ரஜினிக்கு ஆதரவாக செயல்படுவது இல்லை என்ற முடிவை தமிழருவி மணியன் எடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது

இந்த செய்தி குறித்து விளக்கமளித்த தமிழருவி மணியன் ’ரஜினி ஆதரவு நிலையிலிருந்து விலகி விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் அப்படி ஒரு தகவலை தான் வெளியிட வில்லை என்றும் கூறியுள்ளார்

மேலும் தனது அரசியல் வாழ்வு ரஜினியை ஆதரிப்பதோடு முடிந்துவிடும் என்றும் ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு ஒரு நல்ல மாற்றத்தை தர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினி ஆதரவு நிலையிலிருந்து திடீரென தமிழருவி மணியன் மாறியதாக வெளிவந்துள்ள செய்திக்கு அவரே இந்த பேட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web