தமிழகத்தை சேர்ந்த வங்கிக்கு நிதித்துறை திடீர் தடை: ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாது!

 

தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதித்துறை திடீர் தடை விதித்துள்ளதல் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த வங்கியில் இருந்து ஒரு மாதத்திற்கு அனைத்து கணக்குகளில் இருந்தும் 25000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை இன்று மாலை முதலே அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி லட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிராப்டுகள் உள்பட எந்த பரிவர்த்தனைக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது என்றும், அதேபோல் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் தரப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

lakshmi vilas bank

அதேபோல் இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப் பத்திரமும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி மீது கடந்த சில மாதங்களாக பல்வேறு புகார்கள் எழுந்ததன் காரணமாக, ரிசர்வ் வங்கி அதிரடி இந்த வங்கியின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகளவிலான வாராக்கடன் மற்றும் நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாதது ஆகியவையே இந்த வங்கி மீதான நடவடிக்கைக்கு முக்கிய காரணம் ஆகும்

From around the web