நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தமிழக மாணவர் திடீர் தற்கொலை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்வுக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு ஏற்படுத்தி வந்தாலும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தியே தீருவது என்று அறிவித்துள்ளது
 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்வுக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு ஏற்படுத்தி வந்தாலும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தியே தீருவது என்று அறிவித்துள்ளது அதுமட்டுமன்றி நீதிமன்றமும் நீட் தேர்வை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளது

இருப்பினும் நீட் தேர்வுக்கு தயாராகி மற்றும் தயாராகாத மாணவர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வே இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவர் விக்னேஷ் நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த சில நாட்களாக தயாராகி வந்த இந்த நிலையில் சமீபத்தில் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்

வரும் ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அந்த தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து இனியும் ஒரு மாணவரின் உயிர் கூட போகக் கூடாது என்றும் எனவே நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது அடுத்து இந்த ஆண்டு நீட்தேர்வு நடந்தே தீரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web