"தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் குழு"-அறிவித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்!!

தமிழ்நாட்டின் மாநில வளர்ச்சி குழுவின் உறுப்பினர்களை நியமித்து அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
 
stalin

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடக்கிறது. அந்தப்படி நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான திரு மு க ஸ்டாலின். மேலும் அவர் தமிழகத்தில் முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேர்தல் சமயத்தில் கூறிய அத்துணை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்கள் மனதில் நல்லதொரு மதிப்பினையும் இடத்தினை தக்க வைத்துள்ளார்.tamilnadu

மேலும் அவர் கால சூழலுக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து மக்களுக்கு அதனை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க வகையில் தற்போது அவர் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கு குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து அதனை அறிவித்துள்ளார் நம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின். மாநில வளர்ச்சிக் கொள்கையின் குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முழுநேர உறுப்பினராக  சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாநில வளர்ச்சி கொள்கை குழு இலக்கு ,நிர்ணயிப்பது ,கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மாநில வளர்ச்சி கொள்கை குழுவுக்கு பகுதி நேர உறுப்பினர்களாக எட்டு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதில் பேராசிரியர் விஜயபாஸ்கர், சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் அமலோற்பவநாதன் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டனர். மேலும் டிஆர்பி ராஜா, சித்த மருத்துவர் சிவராமன், நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

From around the web