தொற்று பரவலில் தமிழகத்திற்கு நான்காமிடம்! குறிப்பாக இந்த மாவட்டங்களில் பாதிப்பு உச்சம்!!

தமிழகத்தில் தொற்றுப் பரவல் அதிகம் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது!
 
தொற்று பரவலில் தமிழகத்திற்கு நான்காமிடம்! குறிப்பாக இந்த மாவட்டங்களில் பாதிப்பு உச்சம்!!

தற்போது நாடெங்கும் கொரோனா தாக்கம் வேகமாக பரவுகிறது,  நாட்டுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு விதமான தடுப்பூசிகளும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆயினும் பல மாநிலங்களில் கடும் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. மேலும் பல மாநிலங்களும் பல்வேறுவிதமான கட்டுப்பாட்டு விதிகள் தடைகள் ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தி உள்ளன.government

ஊரடங்கு எதிரொலியாக ஆந்திரா டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தமிழகம் கேரளா புதுச்சேரி மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் சில சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் தொற்று அதிகம் காணப்படுகிறது என்று கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னை கோவை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது என்று கூறுகிறது. மேலும் ஒட்டுமொத்தமாக தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 4வது இடத்தில் இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இத்தனை கட்டுப்பாடுகள் தடைகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டாலும் கொரோனா அதிகரித்து வருவது தமிழக மக்களுக்கு வேதனை அளிக்கிறது.

From around the web