தமிழ்நாடு கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் நாளை முதல் அமல்!

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!
 
தமிழ்நாடு கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் நாளை முதல் அமல்!

மக்களிடையே தற்போது ஆட்கொல்லி நோயாக கண்ணுக்கு தெரியாத கிருமிகள் எங்கு பார்த்தாலும் பரவி காணப்படுகிறது கொரோனா வைரஸ். கடந்த ஆண்டில் இந்தியாவில் வர தொடங்கியது ஆனால் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் தற்போது மீண்டும் அதிகரித்து மக்களுக்கு  தந்துள்ளது. மக்கள் அனைவரும் மீண்டும் சோகத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ஒரு சில மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில்சில தினங்களுக்கு முன்பாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன.jaganmohanreddy

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகளும் தடைகளும் போடப்பட்டிருந்தன. மேலும் இந்த இரவு நேர ஊரடங்கு ஞாயிறு கிழமைகளில் முழு நேர ஊரடங்கு இருக்குமென்றும் தமிழக அரசின் சார்பில் சில தினங்கள் முன்பாக தகவல் வெளியானது. மேலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் தமிழகத்தை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. இந்நிலையில் மக்களின் முதல்வர் என்று அம்மாநில மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் அழைக்கப்படும் முதல்வராக தற்போது உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. அவர் ஆந்திர மாநிலத்தில் முதல்வராக உள்ளார்.

அவர் சில நிமிடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஆந்திராவிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. மேலும் இந்த ஊரடங்கு ஆனது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

From around the web