உலகத்திலேயே தமிழகத்தில் தான் கொரோனா குறைவு: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என்றும், வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றிலிருந்து
 

உலகத்திலேயே தமிழகத்தில் தான் கொரோனா குறைவு: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என்றும், வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம் என்றும், கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என்றும், மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

From around the web