இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் முதல்வர் பரப்புரை!

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் பல்வேறு கூட்டணி கட்சிகள் தமது கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ளன.தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள  அதிமுக தன்னுடன் கூட்டணியாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை வைத்துள்ளது.மேலும் எதிர்க் கட்சியான திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி வைத்துள்ளது.

admk

தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் பல கட்சிகளும் கூட்டணி வைத்து தங்கள் வேட்பாளர் அறிவித்தனர். அந்த வேட்பாளர்கள் அந்த தொகுதியில் சென்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில்  தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். அதன்படி இன்று அவர் மதுரை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அவர் தற்போது மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் மேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவித்து இருந்த  என்ற செல்வத்தை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரத்தில்  தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். அப்போது அவர் கூறினார் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தை பெற்று விருது பெற்றது தமிழக அரசு தான் என அவர் கூறினார் .மேலும் அதிமுக அரசின் நீர் மேலாண்மை திட்டத்தால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன எனவும் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

From around the web