கொண்டாடும் தமிழகம்!அடுத்த நான்கு நாட்களுக்கு ஆனந்தம்! காரணம் இந்த கோடை மழை!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
கொண்டாடும் தமிழகம்!அடுத்த நான்கு நாட்களுக்கு ஆனந்தம்! காரணம் இந்த கோடை மழை!

தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் கோடை காலம் ஆனது தொடங்கியது. இதனால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றன. அதனால் மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோடை மழை ரசிக்கின்றனர்.weather

மேலும் அப்பகுதிகளில்  உஷ்ணமும் நிவர்த்தி செய்யப்பட்டதாக காணப்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் குடிநீர் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் ஒரு இன்பமான தகவல் ஒன்று கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.மேலும் தென் கர்நாடகம் கேரளம் வரை ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டலத்தில் சுழற்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் வளிமண்டல சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை நீலகிரி தேனி நெல்லை தென்காசி குமரியில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஏப்ரல் 28 29 30 மற்றும் மே 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம் நீலகிரி தேனி தென்காசி திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web