ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்: அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு, அதிர்ச்சி அடைந்த தீபா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு இழப்பீட்டு தொகை ரூ.68 கோடியை செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ள தமிழக அரசு, நினைவு
 

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்: அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு, அதிர்ச்சி அடைந்த தீபா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு இழப்பீட்டு தொகை ரூ.68 கோடியை செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ள தமிழக அரசு, நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியபோது, ‘ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன் என்றும், அரசுடைமையாக்கியதை எதிர்த்து சட்டரீதியாக மேல்முறையீடு செய்வோம் என்றும் தெரிவித்தார். மேலும் வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் என்றும் எனது சட்டப்போராட்டம் தொடரும் என்றும், அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் எடுத்து கொண்டோமா? அல்லது வழக்கு தொடர்ந்தோமா? என்று கேள்வி எழுப்பிய ஜெ.தீபா, ‘ஜெயலலிதா மரணம் எதிர்பாராதது என்றும், இல்லாவிடில் அவர் உயில் எழுதியிருப்பார் என்றும், ஜெயலலிதா வீட்டை கோயிலாக நினைக்கலாம் ஆனால், கோயிலாக மாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

From around the web