இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் தமிழக அரசு! 95.55சதவீதம் பேர் குணம்!

கொரோனா கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழக அரசு கூறியுள்ளது!
 
இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் தமிழக அரசு! 95.55சதவீதம் பேர் குணம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இரு தினங்களுக்கு நடைபெற்று முடிந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவானது நடைபெற்று முடிந்துள்ளது. மேலும்  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் கண்காணிக்கப்படுகிறது.மேலும் தமிழக அரசானது நேற்றைய தினம் கொரோனா  கட்டுபாடு விதிகளை அறிவித்திருந்தது.

lockdown

அதன்படி தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் ,ஊர்வலங்கள், மத சார் திருவிழாக்கள் நடை பெற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளருக்கு அனுமதி அளித்துள்ளது. தற்பொழுது தமிழக அரசானது மேலும் சில தகவல் வெளியிட்டுள்ளது, அதன்படி தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன், கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்க நேரிடும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன எனவும் தமிழக அரசு அமல்படுத்த உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது  சமாளிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தமிழக அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் தமிழக அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களில் 95.55சதவீதம் பேர்  குணமடைந்துள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசு தகவல் கூறியுள்ளது.

From around the web