"சிவில் மற்றும் கிரிமினல்"  அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!-தமிழ்நாடு அரசு உத்தரவு!

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது!
 
tamilnadu

தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டம் இன்னும் தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றன. அதுவும் குறிப்பாக கோயம்புத்தூர் திருப்பூர் பகுதிகளில் ஊரடங்கு மிகவும் கடுமையாக கடைபிடிக்கப் படுகிறது. மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அரசு உள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு அங்குள்ள மக்களும் இதற்கு இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.hhighcourt

ஊரடங்கு பிறப்பிக்க பட்டாலும் உயர்நீதிமன்றம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை குறைவாக வைக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்படுகிறது. தற்போது அரசு வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளை என்று இரண்டு விதமான நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்களும் நியமித்து உள்ளது தமிழக அரசு. மேலும் 30% பணியாளர்களுடன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஜூன் 14ஆம் தேதி முதல் 30 சதவீதம் நீதிமன்றம் இயங்க அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தி உள்ளது மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்குமென்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

From around the web