தமிழக அரசு ஆர்டர்: "ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே!"மாணவர்கள்  மகிழ்ச்சி!

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
 
தமிழக அரசு ஆர்டர்: "ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே!"மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் சில தினங்களாக கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் தடை விதித்துள்ளன. அதன்படி திருமண விழாக்களில் 100 பேருக்கு மேல் அனுமதியை தமிழக அரசு மறுத்துள்ளது. மேலும் இறுதி ஊர்வல சடங்குகளில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதையும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

tamilnadu

மேலும் பொது இடங்களில்  முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டு விதிகளை பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியிருந்தது.இதில் தமிழக அரசின் சார்பில் இன்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்குகள் நடைமுறைப்படுத்த உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  போக்குவரத்து கழகங்களும் தங்களது பயணம் நேரத்தை மாற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதனை தொடர்ந்து தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகளில் நடத்தப்படும் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கொரோனா  வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசின் சார்பில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web