அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தல்!

பொதுமக்கள் வெளியே செல்லும் போது பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தல்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது  இரு தினங்கள் முன்பு நடைபெற்றது. மேலும் வாக்கு பதிவானது தமிழகத்தில் நிறைவுபெற்றது. மேலும் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது தளங்களுடன் கட்டுப்பாடுகள் மத்தியில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுடன் ஊரடங்கு ஆனது சனிக்கிழமை  தொடங்க உள்ளது.

mask

மேலும் இது ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசானது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போதும் பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளது. அவசிய தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுபோன்று திருவிழாக்கள் மற்றும் மத சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது தமிழக அரசு. மேலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் இரவு 8 மணி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு சார்பில் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் அனைவரும் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

From around the web