கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது தமிழக அரசு!

தமிழக அரசு கொரோனாவின் இரண்டாவது கட்டுப்பாட்டை மீறி விட்டதாக ஐகோர்ட்டில் தலைமை வழக்கறிஞர்!
 
கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் முன்னதாக அறிவித்திருந்த படி ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத்தேர்தல் ஆனது நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். இருப்பினும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே ஒரு சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருந்தது.மேலும் குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி இருந்த வேட்பாளர் சிலருக்கும் கொரோனா இருந்ததும் தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் பிரபலங்கள் பலருக்கும் கொரோனா இருந்தது தெரியவந்தது.

corona

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் இரண்டாவது அலையானது வேகமாக பரவுகிறது.இதனால் தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் முக கவசம் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் போட்டுவிட்டு அறிவித்திருந்தது. ஆயினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் சென்னை கோயம்புத்தூர் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஐகோர்ட்டில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சில சோகமான தகவலை கூறியுள்ளார். அதன்படி தமிழகம் ஆனது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டதாக ஐகோர்ட்டில் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டாவது அலை வைரஸ்  எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவர்கள் கணிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் தொடர் சோகம் நிகழுகிறது.

From around the web