ஏ.சி பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி! வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து ஏசி பேருந்துகளை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
இது குறித்து வெளியான அறிக்கை ஒன்றில் ’ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளும் வகையில் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்
பயணிகள் பின்பக்க வழியாக மட்டுமே பேருந்தில் ஏற வேண்டும், முன்பக்கம் வழியாக மட்டுமே பேருந்துகளில் இருந்து இறங்க வேண்டும். அனைத்து இருக்கைகளும் பேருந்துகளில் நிரம்பிவிட்டால் கூடுதல் பயணிகளை அனுமதிக்கக்கூடாது
பயணிகளுக்கு காய்ச்சல் இருமல் மற்றும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் ஏசி பேருந்துகளில் அனுமதி கிடையாது. மேலும் ஒவ்வொரு பயணியும் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது