நாளையிலிருந்து தமிழக முதல்வர் ரெய்டு  தொடக்கம்! முதல் ரெய்டு கோவையில தான்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நாளை முதல் ஆய்வு செல்லவுள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!
 
stalin

தற்போது தமிழகத்தில் புதிய கட்சி ஆட்சி என்று உள்ளது. அதன்படி தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படுகின்ற திமுக. மேலும் திமுக சார்பில் முதல்வர் கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தான் தேர்தலில் கூடியிருந்த அத்தனை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வைக்கிறார். அதுமட்டுமின்றி இந்த இக்கட்டான காலகட்டங்களிலும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் நிவாரண நிதியையும் வழங்கி மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தினை தக்க வைத்துள்ளார்.kovai

இந்நிலையில் அவருக்கு நிவாரண நிதியாக பிரபலங்கள் எதிர்கட்சி தமிழக மக்கள் அனைத்தையும் நிவாரணத்திற்காக கொடுக்கின்றனர். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்திற்கு விடியல் தர போறாரு என்பதுபோல அவரது ஆட்சி அவ்வாறே உள்ளது. இந்நிலையில் நாளை முதல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.

 அதன்படி தமிழகத்தில் கொரோனா  அதிகம் உள்ள மாவட்டங்களில் மே 20ஆம் தேதி முதல் ஆய்வு செய்ய வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் முதற்கட்டமாக மே 20 கோவை செல்ல உள்ள முதலமைச்சர் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாகவும், இதனால் களத்திலேயே நேராக இறங்கி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மேற்கொள்ள வருவது தற்போது தெரியவந்துள்ளது.

From around the web