தமிழக முதல்வரே தொழிலாளருக்கு உதவிடுக-எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!

பதிவுபெற்ற மற்றும் அதிபராக தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
 
eps

மக்கள் மனதில் விவசாய முதல்வர் என்று அழைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. மேலும் இவர் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அது தற்போது பெரும்பான்மையை இழந்து எதிர் கட்சியாக உள்ளது. மேலும் எதிர்க்கட்சியாக இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என அந்தக் கட்சிக்குள் குழப்பம் நிலவிய நிலையில் இறுதியில் முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ற இவரையே எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக  கட்சி அறிவித்தது.eps

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பினும் மக்களுக்கு தேவையானதை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை கூறியுள்ளார்.

மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 2000 ரூபாயும் சிறப்பு உணவு தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார். மேலும் நிவாரண உதவித் தொகை மற்றும் சிறப்பு உணவு தொகுப்பை வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web