சூப்பர் ஸ்டாருக்கு தமிழக முதல்வர் போனில் வாழ்த்து!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போனில் வாழ்த்து கூறினார்!
 
சூப்பர் ஸ்டாருக்கு தமிழக முதல்வர் போனில் வாழ்த்து!

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சிகளுடன் கூட்டணியாக பாஜக பாமக போன்ற கட்சிகள் வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் தனது மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

eps

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக முழுவதும் சென்று தனது கூட்டணி கட்சி மற்றும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள  திமுக கட்சி  கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

 தமிழக மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் அவருக்கு தற்போது தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனது இதனால் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி போனில் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் மக்கள் மத்தியில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசனும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

From around the web