தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!மக்கள் பதற்றம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதி!
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!மக்கள் பதற்றம்!

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் முன்னர் அறிவித்துள்ளப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது .இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது காவல் கண்காணிப்பில் மிகவும் பாதுகாப்பாக உள்ளன.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் கூட்டணி சந்தித்து உள்ளன . குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாஜக கட்சியையும் பாமக கட்சியும் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளன.

eps

மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து வேட்பாளராக களம் இறங்கி இருந்தார். மேலும் தேர்தல் சமயத்தில் அவர் தமிழகம் முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் தனது கூட்டணி வேட்பாளர்களையும் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.

அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் தற்போது ஆட்கொல்லி நோயாக வரும் கொரோனா தொற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டறியப்பட்டதாக எண்ணினர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று  இல்லை . இந்நிலையில் அவர் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் மூன்று நாட்களுக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

From around the web