தமிழ்நாடு பின்னிலை! குஜராத், சத்தீஸ்கர், கேரளம் போன்ற மாநிலங்கள் முன்னிலை!

தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
தமிழ்நாடு பின்னிலை! குஜராத், சத்தீஸ்கர், கேரளம் போன்ற மாநிலங்கள் முன்னிலை!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக வந்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா நோயின் தாக்கம் அது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வந்தது. ஆனால் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது நோயின் தாக்கம் அது மீண்டும் வீரியம் உள்ளதாக மாறி பல்வேறு இன்னல்கள் மத்தியில் வலம் வந்து உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர்.

corona

மேலும் பல மாநிலங்களில் இரவுநேர ஊடங்கள் நடைமுறையில் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசானது கொரோனா தடுப்பூசி திருவிழா என்று மூன்று நாட்களுக்கு அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. இந்நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஆனது மிகவும் பின்தங்கிய இருப்பதே மிகவும் சோகத்தை அளிக்கிறது. அதன்படி முதலிடத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது. மேலும் நேற்று மட்டும் லட்சம் பேரில் 15 ஆயிரத்து 493 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தகவல் அடுத்து குஜராத் மாநிலத்தில் லட்சம் பேரில் 15 ஆயிரத்து 195 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு ,அதன் பின்னர் கேரள மாநிலத்தில்லட்சம் பேரில் 14 ஆயிரத்து 755 பேர் தற்போது போட்டுக் கொண்டு உள்ளதாகும்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி 617 பேர் மட்டுமே போட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் நேற்றைய தினம் லட்சம் பேரில் வெறும் 5166 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டு தெரிய உள்ளது. இதனால் சத்தீஸ்கர் மராட்டியம் குஜராத் ராஜஸ்தான் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தடுப்பூசி முன்னிலையிலும் தமிழ்நாடு பின்னணியிலும் உள்ளது சோகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் 12 மாநிலங்களுக்கு கீழே உள்ளது நமது தமிழ்நாடு என்பது மிகவும் சோகமான செய்தியாக காணப்படுகிறது.

From around the web