லடாக் மோதலில் தமிழர் வீரமரணம்: முக ஸ்டாலின் இரங்கல்

நேற்று இரவு லடாக்கில் நடந்த திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 5 பேர் பலியாகியிருப்பதாகவும், 11 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த நிலையில் லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை என்ற பகுதி அருகே கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்
 

லடாக் மோதலில் தமிழர் வீரமரணம்: முக ஸ்டாலின் இரங்கல்

நேற்று இரவு லடாக்கில் நடந்த திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 5 பேர் பலியாகியிருப்பதாகவும், 11 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த நிலையில் லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை என்ற பகுதி அருகே கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி ன்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில், ’லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல தலைவர்கள் லடாக்கில் வீரமரணம் அடைந்த தமிழர் உள்பட மூவருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web