தத்தளிக்கும் தமிழகம் 16000 பெருகும் ஆட்கொல்லி கொரோனா!நூறைத் நெருங்கிய பலி!

தமிழகத்தில் ஒரே நாளில் 15ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது!
 
தத்தளிக்கும் தமிழகம் 16000 பெருகும் ஆட்கொல்லி கொரோனா!நூறைத் நெருங்கிய பலி!

தமிழகத்தில் தற்போது ஆட்கொல்லி நோயாக வளர்ந்துள்ளது கொரோனா வைரஸ். அண்டை நாடான சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கடந்தாண்டு பரவ தொடங்கியது. அதன் பின்னர் இந்தியாவில் இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டது.இதற்காக இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் பல்வேறு திட்டங்களுடன் போராடுகிறது. மேலும் தமிழகத்திலும் இந்நோய் தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வீரியம் உள்ளதாக அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசின் சார்பில் இரவு நேர ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. ஆயினும் இந்நோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மையாக உள்ளது.corona

தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கமானது 16 ஆயிரத்து  நெருங்கி மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்துகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயினால் சிகிச்சை பலனின்றி 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுவது. இதனால் தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 651 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் இதில் எவ்வித இணை நோயும் இல்லாமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் செங்கல்பட்டை சேர்ந்த 37 வயது பெண்ணும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் 30 வயதுக்கு மேல் உள்ள உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பேரும் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில்  4250 பேருக்கு புதிதாக கொரோனா உருவாகி உள்ளது என கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ்.

From around the web