தமிழன் பட பாணியில் பஸ் கண்டக்டர் சில்லறை பிரச்சனை!கண்டக்டர் சஸ்பெண்ட்!

பஸ்ஸில் சில்லறை இல்லாததால் முதியவரை தாக்கிய கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!
 
தமிழன் பட பாணியில் பஸ் கண்டக்டர் சில்லறை பிரச்சனை!கண்டக்டர் சஸ்பெண்ட்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு பணிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அனைவரும்  செயல்பட்டனர். தமிழக மக்கள் மத்தியில் வெளியூருக்கு அதாவது சென்னைக்கு சென்றால் பிழைத்துவிடலாம் முன்னேறி விடலாம்  என்ற எண்ணம் உள்ளது. அதன்படியே தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்கள் கிராமப்புற இளைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த இருப்பிடத்தை விட்டு சென்னையில் வேலைக்காக உள்ளனர்.

bus

அவர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் தேர்தலை ஒட்டி சில தினங்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் சென்னை கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.மேலும் சென்னையில் உள்ள  மண்டலங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தனர்.

 தற்போது பேருந்தில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டது  மேலும் சமூக வலைதளங்களில் இந்த செயல் குறித்து வன்மையான கண்டனங்கள் தீயாக பரவுகிறது. அதன்படி பஸ்ஸில் சில்லறை இல்லாததால் கண்டக்டர் முதியவரை தாக்கியுள்ளார். இந்த செயல் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோட்டில் அரசு பஸ்சில்  சில்லரை இல்லாததால் முதியவரை தாக்கினார் கண்டக்டர் குமார் . அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் முதியவரை தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பேருந்துகளில் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.

From around the web