பிரபல தமிழ் நடிகை குண்டர் சட்டத்தில் கைது

வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த தமிழ் நடிகை ஸ்ருதி மற்றும் குடும்பத்தினர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடி போனால் ஆவணி’ என்ற படம் உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்த நடிகை ஸ்ருதி, வெளிநாட்டில் வேலை செய்யும் பணக்கார இளைஞர்களை ஆன்லைனில் நண்பர்களாக்கி கொண்டு அதன் பின்னர் அவர்களை திருமணம்
 

வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த தமிழ் நடிகை ஸ்ருதி மற்றும் குடும்பத்தினர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடி போனால் ஆவணி’ என்ற படம் உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்த நடிகை ஸ்ருதி, வெளிநாட்டில் வேலை செய்யும் பணக்கார இளைஞர்களை ஆன்லைனில் நண்பர்களாக்கி கொண்டு அதன் பின்னர் அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

பல சிம்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல இளைஞர்களை தனது வலையில் வீழ்த்திய நடிகை ஸ்ருதிக்கு அவரது தாயார், தந்தை மற்றும் தம்பி ஆகியோர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ருதியால் ஏமாற்றப்பட்ட கோவை வாலிபர் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்ருதி மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web