உதயநிதி பற்றி பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தகொதிப்பு அதிகமாகிறது இன்று கூறும் அமிர்ஷா!

இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசும் அமித்ஷா!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல வேட்பாளர்கள் கூட்டணி வேட்பாளர்கள் கட்சி வேட்பாளர்கள் என பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதற்காக அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

modi

மேலும் ஒரு மக்களவைத் தொகுதியிலும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.பாஜகவின் மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து இருந்தார்.

மேலும் அவர் தமிழகத்தில் கன்னியாகுமரி பகுதியிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார் .இந்நிலையில் இன்று காலை அமித்ஷா சென்னையில் பிரச்சாரத்தில் சென்றிருந்தார். மேலும் அவர் தற்போது கூறியுள்ளார், பொருளாதாரத்தில் நலிந்த வயர் உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கொடுத்தவர் நரேந்திர மோடிதான் என்றும் மோடியை புகழ்ந்து பேசினார். மேலும் உதயநிதி பற்றி நான் பேசினால் முக ஸ்டாலினுக்கு ரத்தகொதிப்பு அதிகம் ஆகிறது எனவும் அமித்ஷா கூறினார். மேலும் நரேந்திர மோடி தமிழக கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் எனவும் அமித்ஷா கூறினார்.

From around the web