பெண்கள் மீது தாக்குதல் நடத்திய தாலிபான்கள்: உலக நாடுகள் கண்டனம்

 
afghan women

ஆப்கானிஸ்தான் நாடு சமீபத்தில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், பெண்கள் மீடியா துறையில் பணிபுரிய கூடாது என்றும், ஒரு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பெண்கள் கல்வி கற்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது 

பெண்களை குழந்தை பெறும் மெஷினாக மட்டுமே தாலிபான்கள் பார்த்து வருவதை உலகநாடுகள் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக தாலிபான்களை எதிர்த்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போராடி வருகின்றனர் என்பதும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தநிலையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்த நாடுகளிலும் போராட்டம் நடத்தும் பெண்களை தாக்கியதாக வரலாறு இல்லை என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் கண்மூடித்தனமான பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web