தாலி, மெட்டியை கழட்டி கொடுத்த நீட் மாணவி: பரபரப்பு தகவல்

 

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நெல்லையில் உள்ள நீட் தேர்வு மையம் ஒன்றில் புதுமணப் பெண் ஒருவரின் தாலி மட்டும் மெட்டியை அதிகாரிகள் கழட்டச் சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. முத்துலட்சுமி ஏற்கனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று அவர் நெல்லையில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்தார்

அவரிடம் தாலி மற்றும் மெட்டி ஆகியவற்றை அதிகாரிகள் கழட்ட சொன்னதால் அவர் தனது மெட்டி, தாலியை கழட்டி தனது கணவரிடம் கொடுத்துவிட்டு அதன் பின்னர் நீட் தேர்வு எழுத சோகமாக சென்றார். மணப்பெண் என்று கூட பாராமல் தாலி மற்றும் மெட்டியை அதிகாரிகள் கட்டச் சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

From around the web