பாண்டிபஜார் ஜவுளிக்கடை அதிபர் குடும்பத்தினர் 20 பேருக்கு கொரோனா: 2 பேர் பலி என தகவல்

சென்னை பாண்டி பஜாரில் புகழ்பெற்ற ஜவுளிக்கடை ஒன்று கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் அந்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இருபது பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் சமீபத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா இருந்ததாகவும் அதனால் அந்த
 

பாண்டிபஜார் ஜவுளிக்கடை அதிபர் குடும்பத்தினர் 20 பேருக்கு கொரோனா: 2 பேர் பலி என தகவல்

சென்னை பாண்டி பஜாரில் புகழ்பெற்ற ஜவுளிக்கடை ஒன்று கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் அந்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இருபது பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் சமீபத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா இருந்ததாகவும் அதனால் அந்த கடையின் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து அந்த கடையின் உரிமையாளரின் மனைவி மகன்கள் மருமகள்கள் பேரக் குழந்தைகள் உள்பட 20 பேர் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் அனைவரும் சென்னை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் ஜவுளி கடை அதிபரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்து விட்டதாகவும் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. ஒரு சில நாட்கள் மட்டுமே ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தியதால் ஏற்பட்ட விளைவு காரணமாக ஜவுளிக்கடை அதிபர் குடும்பமே கொரோனாவால் தாக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web