எஸ் வி சேகர் குறித்த முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்த காவல்துறை: பரபரப்பு தகவல்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தேசியக்கொடி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் முதல்வருக்கு அவப்பெயரை உருவாக்கும் வகையிலும் ஒரு கருத்தை அவர் தெரிவித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் எஸ்வி சேகர் மீது தேசியக்கொடியை அவமதித்ததாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய கொடியை அவமதித்த வழக்கில் ஆஜராகும்படி எஸ்வி சேகரை காவல் துறை உத்தரவிட்டு
 

எஸ் வி சேகர் குறித்த முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்த காவல்துறை: பரபரப்பு தகவல்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தேசியக்கொடி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் முதல்வருக்கு அவப்பெயரை உருவாக்கும் வகையிலும் ஒரு கருத்தை அவர் தெரிவித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டது

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்வி சேகர் மீது தேசியக்கொடியை அவமதித்ததாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய கொடியை அவமதித்த வழக்கில் ஆஜராகும்படி எஸ்வி சேகரை காவல் துறை உத்தரவிட்டு இருந்தது

இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று எஸ்வி சேகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். இந்த நிலையில் எஸ்வி சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது காவல்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது

இன்று எஸ்வி சேகர் காவல்துறையில் ஆஜரானதாகவும், விசாரணைக்கு ஆஜரான அவரை 28ஆம் தேதி மீண்டும் ஆதரவாக உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என காவல்துறை நீதிமன்றத்திடம் உறுதிமொழி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web