சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் – அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

பாஜகவில் மிக முக்கிய பொறுப்பை வகித்து வந்த பெண் தலைவர்களில் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை பலனிக்காத நிலையில், நேற்று இரவு சுஷ்மா ஸ்வராஜின் மண்ணைவிட்டு மறைந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சுஷ்மாவின் உடல், ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள அவரது தவான் தீப் அப்பார்ட்மெண்ட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகலில்
 

பாஜகவில் மிக முக்கிய பொறுப்பை வகித்து வந்த பெண் தலைவர்களில் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் – அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!


இந்நிலையில் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை பலனிக்காத நிலையில், நேற்று இரவு சுஷ்மா ஸ்வராஜின் மண்ணைவிட்டு மறைந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சுஷ்மாவின் உடல், ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள அவரது தவான் தீப் அப்பார்ட்மெண்ட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

பொதுமக்கள் அஞ்சலிக்காக பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகலில் வைக்கப்படும் என்றும், பின்னர் பிற்பகல் 3 மணியளவில் லூதி சாலையில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்தாண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உடல்நிலைக் குறைவினாலேயே அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். 

From around the web