சமீபத்தில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவிக்கு கொரோனா: பெண் காவல் ஆய்வாளருக்கும் பரவியதால் பரபரப்பு

சமீபத்தில் நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யூடியூபில் வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டார் வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, சூர்யா தேவியை ஜாமீனில் எடுத்தார் என்றும், அதன்பின்னர் தற்போது சூர்யாதேவி , தனது வீட்டில் குழந்தைகளுடன் உள்ளார் என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் திடீரென சூர்யாதேவிக்கு கொரோனா
 

சமீபத்தில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவிக்கு கொரோனா: பெண் காவல் ஆய்வாளருக்கும் பரவியதால் பரபரப்பு

சமீபத்தில் நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யூடியூபில் வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டார்

வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, சூர்யா தேவியை ஜாமீனில் எடுத்தார் என்றும், அதன்பின்னர் தற்போது சூர்யாதேவி , தனது வீட்டில் குழந்தைகளுடன் உள்ளார் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென சூர்யாதேவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவரை விசாரணை செய்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

வனிதா-சூர்யாதேவி விவகாரம் ஊடகங்களில் உச்சகட்டமாக இருக்கும் நிலையில் திடீரென தற்போது சூர்யாதேவிக்கு கொரோனா என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web