லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர் கைது!

நில அளவீடு செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் தங்கதுரை கைது செய்யப்பட்டுள்ளார்!
 
லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர் கைது!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப தமிழகத்தில் கனிம வளங்கள் கரிம வளங்கள் போன்ற பல வளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு சிறப்பினையும் பெற்று தமிழக மிகவும் பெருமை மிக்கதாக காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலையில் தள்ளியது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் சிறு பொருள்கள் சிறு சான்றிதழ் வாங்குவதற்கு கூட லஞ்சம் கொடுக்கும் நிலைமைக்கு தற்போது தமிழகம் உள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

kaithu

மேலும் சில தினங்களுக்கு முன்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு அரசு அறிவிக்கும் இலவச சான்றிதழ்களை பெறுவதற்கும் லஞ்சம் கொடுப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியிருந்தனர். தற்போது லஞ்சம் பெற்ற அதிகாரி அலுவலகத்திலேயே சிக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் விராலிமலை பகுதியில் நடைபெற்றது. இந்த விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் நிலம் அளவீடு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் சர்வேயர் தங்கதுரை.

இதனைத் தொடர்ந்து அவர் 10,000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும்  நில அளவை பிரிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது சர்வேயர் தங்கதுரை கையும் களவுமாக சிக்கியது பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது போன்று பல சம்பவங்களை லஞ்சம் ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

From around the web